Categories
கல்வி பல்சுவை

”மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை” ONGC வழங்குகின்றது …..!!

கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு ஓஎன்ஜிசி கல்வி உதவி தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வரும் எஸ்சி , எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவ , மாணவிகள் 1,000 பேருக்கு ONGC நிறுவனம் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதவித்தொகை  திட்டத்தின் பெயர் : ONGC Scholership for SC/ST ஸ்டூடண்ட்

உதவித் தொகை ரூபாய் 48 ஆயிரம் 1 வருடத்திற்கு
வயது : 01. 10 .2019 தேதி படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று , ஏதாவது பொறியியல்  பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு BE  , B.tech படித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப் படிப்பை முடித்து MBA / M.SC Geology / M.SC Geophysics பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

பிளஸ்-2 அல்லது இளநிலை பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் தற்போது படித்துக்கொண்டிருக்கும் கல்லூரியில் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 4 1/2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். உதவித் தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரம் 10.12.2019 அன்று ஓஎன்ஜிசி இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :www.ongcindia.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து , பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் கல்லூரி முதல்வரின் ஒப்புகை சான்றிதழ் பெற்று 15.10. 2019_க்குள்அனுப்பி வைக்கவும்.

உதவித் தொகையின் எண்ணிக்கை விபரம் :

ENGINEERING படிக்கும் மாணவர்கள் 494 பேருக்கு 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ 4,000 வழங்கப்படும்.
MBBS படிக்கும் மாணவர்கள் 90 பேருக்கு 4  ஆண்டுகளுக்கு மாதம் ரூ 4,000 வழங்கப்படும்.
MBA படிக்கும் மாணவர்கள் 146 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ 4,000 வழங்கப்படும்.
MAster in geology , geophysics படிக்கும் மாணவர்கள் 270 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ 4,000 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு : www.ongcindia.com

Categories

Tech |