Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓங்கி அடித்த இளம் படை… கீழே விழுந்த சென்னை…. கெத்தாக முதலிடம் ….!!!

டெல்லி கேப்பிடல் அணி 33 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

ஐபிஎல் இரண்டாவது சீசனில் 36ஆவது போட்டி  இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 10ரன்னிலும், ஷிகர் தவான் 8 ரன்னிலும் ஆட்டம் இழக்க ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஷ்ரேயஸ் ஐயர் 43 ரன்னும், ரிஷப் பண்ட் 24 ரன்னும், ஹெட்மையர் 28 ரன்னும், லலித் யாதவ் 14* ( நாட் அவுட்) அக்ஷர் பட்டேல் 12ரன்னும், ரவிச்சந்திரன் அஸ்வின் 6* (ஆட்டமிழக்காமல்) எடுக்க 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ரகுமான், சக்கரியா தலா  2 விக்கெட்டும்  வீழ்த்தினர்.

பின்னர் 155 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்புடன் ஆடினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் சஞ்சு சாம்சன் போராடியும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை.

சஞ்சு சாம்சன் 53 பந்துகளில் 70* ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாம் இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல் சென்னையை கீழே தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது.இளம் படையைக் கொண்ட டெல்லி கேப்பிடல் அடுத்தடுத்து வெற்றியை குவித்து வரும் நிலையில் இன்றைய வெற்றியின் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியதை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

Categories

Tech |