விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் சாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து மேலகாந்தி நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சாத்தூரை சேர்ந்த முத்துராஜ்(21) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 24 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது முத்துராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.