சமையலுக்கு மட்டும் பயன்படுத்தி வந்த வெங்காயத்தை பல வழிகளில் பயன்படுத்தி மருத்துவ பலன்களை அடைய முடியும் அவை
- வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நீர்க்கடுப்பு சரியாகும்.
- வெயிலின் காரணமாக உடம்பில் கட்டிகள் ஏற்பட்டால் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கட்டிகள் மீது தடவி வந்தால் மறைந்துவிடும்.
- வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் போட்டு வதக்கி சாப்பிடுவதால் உடல் சூடு குறையும்.
- வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுகளில் தேய்த்து வர மூட்டு வலி குணமடையும்.
- வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதனை முகர்ந்து பார்க்க வைத்தால் தலைச்சுற்று காணாமல் போகும். மயங்கி விழுந்தவர் மயக்கம் தெரிவார்கள்.
- வெங்காயத்தை நன்றாக வேகவைத்து கற்கண்டு மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெற்றதாக இருக்கும்.
- நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நன்றாக வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமடையும்.