2020 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்த தடை நீக்கம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனவும், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. வர்த்தக அமைப்பின் ஒரு பிரிவான வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பிரச்சனைகளை கையாண்டு வருகிறது.