Categories
தேசிய செய்திகள்

“ஆனியன் நகி பையா” என்று கூறியவருக்கு… ஏற்பட்ட விபரீதம்… டெல்லியில் அரங்கேறிய சம்பவம்..!!

டெல்லியில் வெங்காயம் தர மறுத்த ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வடக்கு பகுதியை சேர்ந்த ரியாஸ் அலி என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 30 ஆண்டுகளாக டெல்லியிலேயே தங்கி தினமும் கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி ஃபத்தீஷ்பூர் பேரி என்ற பகுதியில் உள்ள எஸ்பி பார்ம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கூலித்தொழிலுக்காக சென்றுள்ளார்.

அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் உணவருந்த கேன்டீன் ஒன்று உள்ளது, அங்கு உணவருந்த சென்ற அலிக்கு அங்கு பணியாற்றிய ஊழியரான பவன் என்பவர் உணவு பரிமாறி உள்ளார், அப்போது ரியாஸ் அலி தனது உணவுடன் வெங்காயம் அதிகமாக வைத்து எடுத்து வரவும் என கேட்டுள்ளார். அதற்கு பவன் மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கத்தியால் பவனை குத்தியுள்ளார்.

பின்னர் கத்தியை மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ரியாசத் அலியை தேடி வந்தனர். பின்னர் அலியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது வெங்காயத்திற்காக அவர் கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |