Categories
மாவட்ட செய்திகள் வணிக செய்திகள்

வெங்காயம் விலை சதம் அடித்தது – பொதுமக்கள் அதிர்ச்சி

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை சதம் அடித்துள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு வெங்காயம் ரூ .70 முதல் ரூ .80 வரை விற்பனை ஆனது .ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையோ ஏறுமுகமாக உள்ளது .

ஆந்திரா வெங்காயம் ரூ 60 முதல் 70ரூபாயாக உள்ளது
சாம்பார் வெங்காயம் ரூ 80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது .

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ .90 முதல் 100 வரை உயர்ந்துள்ளது .இதனால் தெருவோர கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வார்களே என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |