Categories
கல்வி மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு வழிமுறை வெளியீடு….!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன், ஆஃப் லைன் பகுதியளவு  என்று  மூன்று முறைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள லேப் டாப்  மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க கூடாது என்றும்,

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், ஒன்பதாம் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் வரை என்று, நான்கு முறைக்கு மிகாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு ஆன்லைன் வகுப்பும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடிந்த பின்பும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆறு  வகுப்புகள் என்று வாரத்துக்கு 28 வகுப்புகள்  மட்டுமே எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |