தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்புகள் புரியாததாலும், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளான 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன்-ஜோதி தம்பதியரின் மகன் விக்ரபாண்டி, திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் விக்ரபாண்டிக்கு ஆன்லைன் வகுப்பு புரியாததால் வகுப்புகளை புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது.
எனினும் வகுப்புகளை கவனிக்க அவனது பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விக்கிரவாண்டி வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தப் போதிலும் சிகிச்சை பலனின்றி விக்ரபாண்டி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.