ஆன்லைன் கடன் மோசடி அல்லது புகாரளிக்க இணையதள முகவரியை ஆர்பிஐ தற்போது வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் கடன் செயலிகள் விவகாரம் பற்றிய எச்சரிக்கை விடுத்ததுள்ளது . இந்த லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நபர்கள், அதிக வட்டி, பிராசஸிங் கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதித்து வாடிக்கையாளர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இதனால் இதுபோன்ற ஆப்களிடமிருந்து விலகியிருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது.
புகார் அளிக்கலாம்:
அதேசமயம் ஆன்லைன் கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களாக நீங்கள் இருந்தால் தைரியமாக முன்வந்து https://sachet.rbi.org.in என்ற தளத்தில் புகார் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருங்கள்
ஆன்லைன் கடன் செயலி மோசடி தொடர்பாக தெலுங்கானாவில் சீன நாட்டவர் உட்பட நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். நகரத்தில் உள்ள கால் சென்டரான குபேவோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை நடத்திய பின்னர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆக வாடிக்கையாளர்கள் கே.ஓய். சி அப்டேஷன் உள்ளிட்ட பலவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.