ஆன்லைனில் நட்பாய் பழகிய பெண்ணை கொலை செய்து சூட்கேசில் பேக் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஜப்பானில் இருக்கும் நிஷியோ என்கிற ஊரில் இருந்த பாலத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக பெரிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை யாரும் எடுத்துச் செல்லாததால் காவல்துறையினர் சென்று திறந்து பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சூட்கேஸில் பெண்ணொருவரின் சடலம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சடலமாக சூட்கேஸில் இருந்தது என்ற பெண்ணின் பெயர் Wang என தெரியவர அவரது கொலை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் Wang சீனாவை சேர்ந்த 31 வயது நபருடன் WeChat என்ற சமூக வலைத்தளம் மூலமாக நட்புடன் பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். அப்போதே இந்த கொலை நடந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பல நாள் காவத்துறையினரிடம் சிக்காமல் இருந்த அந்த நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். Wang கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.