பிரதமர் மோடியின் நினைவு பரிசுக்கள் செப்டம்பர் 14 தொடங்கி 20 நாட்கள் நடைபெறுமென்று மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வார். அப்போது அவருக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்று , சந்தித்து பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். இந்த பரிசுப்பொருட்களை ஏலம் விட்டு இதில் இருந்து வரும் வருவாயை கங்கையை சுத்தம் செய்வதற்கான திட்டத்தின் செலவிற்க்கு வழங்குகின்றது.ஏற்கனவே மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஏலம் விட்டது.14 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 1,800 பரிசுப்பொருட்கள் பொருட்கள் ஏலம் விட்டநிலையில் அதில் எவ்வளவு வருவாய் கிடைத்தது என்று இன்னும் மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தான் ஜனவரிக்கு பின்பு பிரதமர் மோடி சுற்றுபயணம் செய்து பெற்ற 2,772 நினைவு பரிசு பொருட்களை ஏலம் விடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் கூறுகையில், பிரதமர் மோடியின் உருவப்படம், தலைப்பாகைகள், சால்வைகள், வாள்கள் சிலைகள் என மொத்தம் 2,772 பொருள்களை டெல்லியில் உள்ள National Gallery of Modern Art என்ற இடத்தில் வைத்துள்ளோம். இதற்கான ஏலம் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3_ஆம் தேதி வரை நடைபெறும் இதன் வருவாயை கங்கை தூய்மை திட்டத்திற்கு செலவு செய்யப்படும் என்றும் இதன் விற்பனை ஆன்லைனில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.