தமிழக அமைச்சரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அரசாணை தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் தடை சட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஆணையும் அமைக்கப்படும். இந்த ஆணையமானது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விளையாட்டை வழங்குவோர் செயல்பாடுகளை கண்காணிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். இதனையடுத்து உள்ளூரில் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு உரிய முறையில் பதிவு சான்றிதழை ஆணையம் வழங்கும் என்பதால், பதிவு சான்றிதழை வாங்காமல் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டு களில் பணம் மற்றும் நகை போன்றவைகளை வைத்து விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ஆணையத்தில் ஆன்லைன் புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்து அதற்கான தண்டனைகளை வழங்கும்போது அதில் நீதிமன்றத்திற்கு தலையிட உரிமை கிடையாது. அதோடு ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்தும் விதமான விளம்பரங்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.