Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.  அக்டோபர் மூன்றாம் தேதி பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து,  மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேம் பெடரசன் ஆப் என்று அமைப்புச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

இந்த வழக்கு இன்றையதினம் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதேபோன்று தொடரப்பட்ட வழக்குகள்  நிலுவையில் இருக்கிறது. எனவே அதனுடன் சேர்த்து விசாரிப்பதாக வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்தனர். அதை ஏற்று வழக்கு நவம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |