Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைன் மூலம் விற்பனை…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐந்து பேர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இவர்கள் காவல் துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதில் 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள் பொன் நகர் கிராமத்தில் வசிக்கும் பாண்டியன், ராஜா, விஜயகுமார் என்பது தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், மோட்டார் சைக்கிள் மற்றும் காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |