ஆன்லைனில் படங்கள் வெளியாவது குறித்து ஏற்பட்ட விவதாதத்தில் First Night First Show என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சினிமா துறை சார்பில் ஏற்கனவே எடுக்கப்பட்டு எடிட்டிங், டப்பிங் என அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பதற்காக பல படங்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.
அதில் ஒரு சில படங்களின் தயாரிப்பாளர்கள் படங்களை தியேட்டர் திறக்கும் வரை வைத்திருக்க முடியாது எனக் கூறி அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட தளங்களில் OTT என்ற முறையில் படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பொன்மகள் வந்தால், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதையடுத்து பென்குயின் உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ள நிலையில், இந்த புது விதமான அனுபவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, OTT முறையில் இரவில் படங்கள் ரிலீஸ் ஆவதால், First Night First Show என்ற ஹாஷ்டேக்கில் விவாதங்கள் அதிகம் நடை பெற்றுள்ளதால், அந்த ஹாஷ்டேக் தற்போது #trending ஆகியுள்ளது.