Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ஆபாச புகைப்படங்கள்… அடுத்தடுத்த பரபரப்பு வாக்குமூலம்…!!!

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரை கைது செய்து மூன்றாவது நாளாக இன்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதில் பல பரபரப்பு வாக்குமூலம் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று 3வது நாளாக அவரிடம் விசாரணை செய்தனர். அதில் ஆசிரியர்களுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. மேலும் இதுகுறித்து ஆசிரியர்கள் பலரும் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், நிர்வாகம் அவரை கண்டித்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாணவர்கள்  அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்வதாக கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் வந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறி அவர்களை பள்ளி சீருடையில் இல்லாமல், விரும்பிய ஆடைகளை அணிந்து வர கூறுவதும், அப்படி வரும் மாணவர்கள் சிலரை குறிவைத்து நீ மிகவும் அழகாய் இருக்கிறாய் என்று கூறி ஆபாசமாக நடந்து கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் போதுகூட மாணவிகளை படம்பிடித்து ஆபாசமாக மாப்பிங் செய்து அதை  அவர்களுக்கு அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னும் சில ஆசிரியர்கள் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

Categories

Tech |