புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடனாளியான இளைஞர் ஒருவர் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி கோர்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் சிம்கார்டு விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாததால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்து உள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையானவர் பலரிடம் கடனாகப் பணம் பெற்று ரம்மியில் விளையாடி தோல்வியடைந்துள்ளார். கடன் தொல்லையால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்படவே விஜயகுமார் கடும் மன உளைச்சலில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்யுங்கள் என செல் போனில் ஸ்டேட்டஸ் வைத்த விஜயகுமார் உடலில் பெற்றோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு நாடு, கருநாடகம், கேரளத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் உயிரை மாய்த்து உள்ளனர். அதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வகுக்கின்றன.