Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை – தமிழக அரசு ஏமாற்றம் : மத்திய அரசு முடிவால் பரபரப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளின் நோடல் ஏஜென்சியாக மத்திய அரசு செயல்படுவதால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநில அரசும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது.

ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்து, அதனை அறிவிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, ஆன்லைன் விளையாட்டுக்கான விதிகளை வகுப்பது உள்ளிட்ட விவகாரங்களை கவனிப்பதற்காக ”நோடல் ஏஜென்சியாக”  இதை கண்காணிக்கும் அமைப்பாக இனி மத்திய அரசினுடைய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைச்சகம் சார்பில் தான் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான அனைத்து விதிகளும் வகுக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் இனி மாநில அரசுகளால் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்வதற்கான வாய்ப்புகளோ இருக்காது. ஏனென்றால் இந்த கட்டுப்பாடுகள் முழுக்க முழுக்க இனி மத்திய அரசினுடைய முடிவுக்கு சென்றுவிடும்.

இனி இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுப்பதே இறுதி முடிவாக இருக்கக்கூடும் . மத்திய அரசினுடைய மின்னனும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை நோடல் ஏஜென்சியாக நியமித்து இருப்பதை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றன. அதே சமயம் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டம் கொண்டுவந்துள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு மத்திய அரசின் முடிவு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Categories

Tech |