Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.30 லட்சம் கடன்… திருடனாக மாறிய போலீஸ்காரர்…. அதிர்ச்சி தகவல்…!!!

கேரள மாநில ஆலப்புழாவில் அமுல் தேவ் கே.சதீசன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீசராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் எர்ணாகுளம் வையபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்தவர் நடேசன். இவரும் அமுல் தேவ் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது. இதனையடுத்து ஞாறக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் துப்பு எதுவுமே கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தனது வீட்டிற்கு கணவரின் நண்பரான தேவ் அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீசில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அமுல்தேவிடம் விசாரணை நடத்தினார். அப்போது நண்பர் வீட்டில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது போலீசாராக பணியாற்றி வந்த அமுல் தேவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த விளையாட்டுக்கு அடிமையான அமல் தேவ் இதில் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். மேலும் தனக்கு கிடைக்கும் பணம் முழுவதையும் இந்த விளையாட்டிலே இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க தொடங்கினார். இந்நிலையில் கடனை அடைக்க நண்பர் வீட்டில் திருட திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் நண்பர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு யாரும் கவனிக்காத நேரத்தில் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. திருடிய நகைகளில் சிலவற்றை அப்பகுதியில் அடகு வைத்தும், மீதி நகைகளை விற்றதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நகைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |