Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்க E-Box நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை என இரண்டு துறையிலும் நவீன இனையதளங்களை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே நீட் போன்ற போட்டித்தேர்வுகளை மாணவ, மாணவியர் எந்த ஒரு தயக்கமும் இன்றி, உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலை மாணவர்களுக்கு தனித்துவம்மிக்க பயிற்சி அளிக்கும் திட்டத்தினை 2017ம் ஆண்டு தமிழக அரசு துவக்கி வைத்தது.

இந்த திட்டத்தில் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 மையங்களில் இந்த பயிற்சி வகுப்பானது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியினை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் போட்டி தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கிடும் வகையில், கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சியினை வழங்கிட முடிவெடுத்தது.

இந்த பயிற்சியினை பெற தற்போது 7,420 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சி வகுப்பில் அறிவியல் பிரிவுகளில் 4 மணி நேரம் பயிற்சியும், அன்றைய தினமே ஒவ்வொரு பாடத்திற்கும் 1 மணி நேரம் வீதம் 4 மணி நேரம் பயிற்சி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

Categories

Tech |