ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மொத்த ஆன்லைன் வருவாய் கட்டணம் விதிக்கப்படுவதால் பல்வேறு நாடுகள் பயன் பெறுவதாக லக்ஷ்மிகுமரம் மற்றும் ஸ்ரீதரன் சட்ட நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் “பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு அவர்களது லாபத்தில் வரிவிதித்து வந்தது.
அந்நாடுகள் இப்போது மொத்த ஆன்லைன் வருவாய் கட்டண முறைக்கு மாற முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இப்போது 18% GST செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக அரசுக்கு வருடத்திற்கு ரூபாய்.2,200 கோடி வருமானம் கிடைக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீது இந்த மொத்த வருவாய் கட்டணத்தை விதித்து வருகின்றனர்.
இவற்றில் சட்டப்படி பதிவுசெய்யப்படாத பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும் இருக்கிறது. இதுபோன்ற பதிவுசெய்யப்படாத ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை கண்டறிய GST கவுன்சில் குழு ஒன்றினை அமைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சாதாரண விளையாட்டாக இருந்தாலும், திறன்சார்ந்த விளையாட்டாக இருந்தாலும் இந்த 2 விதமான விளையாட்டுகளுக்கும் ஜிஎஸ்டி வரியினை 28% ஆக உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.