Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கிறது..!!

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீர் அழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் நாளுக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |