Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரும்பம் இருந்தா விண்ணபிக்கலாம்…. அனைத்தும் இணைக்க வேண்டும்…. ஆட்சியரின் தகவல்….!!

பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விருப்பம் இருக்கும் வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிக உரிமை கோருபவர்கள் மட்டும் வருகின்ற 10-ஆம் தேதி வரை அரசு தெரிவித்த ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து விண்ணப்பத்துடன் கடை அமைவிடத்தின் கொள்ளளவு, சுற்றுப்புறங்களில் வழியை குறிக்கும் வகையிலான வரைபடம், சாலை வசதி, கட்டிடத்திற்கான வரைபடம், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், உரிமை காட்டும் ஆவணம் உரிமத்திற்கான கட்டணம் 500 ரூபாய் அரசு கணக்கில் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது, வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டு இருக்கிறதா என விவரத்துடன் தற்காலிக உரிமத்தின் ஆணையினை இ-சேவை மையம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |