சமீப மாதங்களாக ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடிகளும், ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் முதலீடுகள், ஆன்லைனில் கடன் என பல மோசடிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இது குறித்து காவல்துறை அதிகாரிகளும், பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இந்தக் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில்,
ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று திமுக எம்பி செந்தில்குமார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் பாதுகாப்பற்றது. கடன் வழங்கும் செயலிகளால் தற்கொலையும் அதிகரித்து வருகிறது.
அதனால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். பொதுமக்களும் இது போன்ற ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று பின் அவதிப்பட வேண்டாம். நன்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கும்போதே ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆன்லைனில் முன்பின் தெரியாதவர்களிடம் கடன் வாங்குவது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை மக்கள் உணர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.