ஆன்லைன் விளையாட்டில் அதிக பணத்தை தோற்ற காரணத்தால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை பகுதியில் நித்திஸ் என்பவர் வசித்துவருகிறார். அவர் ஆன்லைன் விளையாட்டில் தனது பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வேலை செய்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை திருடி, அந்த பணத்தின் மூலம் ஆன்லைன் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் முழு பணத்தையும் தோற்றதால் ஏற்பட்ட விரக்தியில் நித்திஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
ஆன்லைன் விளையாட்டில் பணம் தோற்ற காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக நித்திஷ் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற காரணத்தால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.