ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்தை கடந்து இருப்பதாக மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தோழமைக் கட்சிகளோடு அவ்வப்போது காணொளி வாயிலாக ஆலோசனைகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழக அரசுக்கு அவருடைய பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும், அதேசமயம் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.
அதே சமயத்தில் தற்போது அவர் கூறியிருப்பது, தமிழகத்தில் பரிசோதனையை போதிய அளவில் மேற்கொள்ளாதது ஏன் ? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். சோதனை விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும் என்றும், பரிசோதனை செய்யப்பட்ட பத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்திருப்பதாகவும் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்தைக் அடைந்திருப்பதாகவும் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.