Categories
தேசிய செய்திகள்

4 மணி நேரம் தான்… கேள்வி கேட்க முடியாது… இன்று கூடும் நாடாளுமன்றம் – 40 மசோதாக்கள் சாத்தியமா ?

நாட்டையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இடையே இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட இருக்கின்றது.

இந்த முறை நான்கு மணி நேரம் தான் ஒரு அவை கூட இருக்கிறது. நாற்பது மசோதாக்கள் வரை எடுத்துக் கொள்வது சாத்தியமா ? என்ற கேள்வியும் எழுந்து இருக்கின்றது. பொதுவாக மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர்,  பட்ஜெட் கூட்டத்தொடர் என 3 வகையான கூட்டத்தொடர்கள் இருக்கிறது. இதில் பெரிய கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர். மழை மற்றும் குளிர் கால கூட்டத்தொடர் ஒன்றரையில் இருந்து இரண்டு மாதங்கள் நடக்கும் குறுகிய கால கூட்ட தொடர் ஆகும்.

அந்தவகையில் தற்போது தொடங்க இருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் 25 நாட்கள் நடக்கக்கூடிய அவை கொரோனா பெருந்தொற்றால் 18 நாட்கள் நடக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இல்லாமல் தொடர்ச்சியாக 18 நாட்கள் நடக்கிறது.  பொதுவாக நடக்கக்கூடிய நேரமனா காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை  என்ற நேரம் கொரோனா பெருந்தொற்றால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அலுவலர்களுக்கு இடையே இடைவெளி விடப்படும் அதை சபாநாயகர் முடிவு செய்வார் சில முக்கியமான மசோதாக்கள் மீது விவாதங்கள் எல்லாம் நடைபெறும் இடைவிடாது போது பொதுவாக நடைபெற கூட ஒரு விதி ஆனால் இந்த முறை குறைந்த நேரமே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது தினமும் 4 மணி நேரம் தான் அவை நடக்க இருக்கிறது நாடாளுமன்றத்தின் மக்களவை நாலு மணி நேரம் மாநிலங்களில் நடக்கிறது காலை 9 மணியிலிருந்து 7 மணி வரை மாநிலங்களவை மாநிலங்களவை பிற்பகல் 3 மணியில் இருந்து 7 மணி வரை

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை தினமும் 4 மணி நேரம் தான் நடைபெற இருக்கின்றது. காலை 9 மணியில் இருந்து 1 மணி வரை மாநிலங்களவையும், பிற்பகல் 3 மணியில் இருந்து 7 மணி வரை மக்களவையும் நடைபெற இருக்கின்றது. இன்று ஒரு நாள் மட்டும் மக்களவை காலையும், மாநிலங்களவை பிற்பகலில் நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் 23 மசோதாக்கள் தயாராக இருக்கின்றது. 13 துணை மசோதா என்று சொல்கிறார்கள். தினமும் நான்கு மணி நேரம் மட்டும் தான் அவை நடைபெறுகின்ற போது எப்படி 40 மசோதாக்கள் நிறைவேற்ற முடியும். 40 மசோதாக்களை நிறைவேற்றுவது சாத்தியமா ? பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்க கூடிய சூழலில் எதிர்க்கட்சிகள் அவையை முடக்க மாட்டார்களா ? என்ற சூழலில் நான்கு மணி நேரத்தில் எதை விவாதிக்க முடியும், இன்னும் பேசுவதற்கு நேரம் கொடுக்க முடியாத ஒரு சூழல் கூட ஏற்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அவைக்கு வரும் எம்.பிக்கள் பேனாவை பயன்படுத்தாமல் கையெழுத்து டிஜிட்டல் மயம் செய்யப்பட்டிருக்கிறது. எந்திரிச்சு கேள்வி கேட்க இந்த முறை அனுமதி கிடையாது. எழுத்துப்பூர்வமான கேள்விகள் கேட்கப்படும், அதற்க்கு  எழுத்துப்பூர்வமாக பதில் கொடுக்கப்படும். மக்களவையில் பார்வையாளர்களுக்காக மாடங்களில் உறுப்பினர்கள் கொஞ்ச பேர் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள். சமூக விலகலை பின்பற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. கடுமையான கெடுபிடிகள் இருக்கிறது. எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்பு தான் அனுமதிக்கப்படுகின்றார்கள். மிக முக்கியமான பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த 40 மசோதா சாத்தியமா ?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |