தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடை திறப்பு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்படும்.
அரசு மது கடைக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சென்னை, திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நாளை மதுக் கடைகளை திறக்க பாடாது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். மால்கள், வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படாது. நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.