ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வுகளான ஓபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 896 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ்க்கான முதல் தேர்வுகள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஜூலை 12 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 5,50,000 பேரில் இந்திய அளவில் 13,245 பேரும், தமிழக அளவில் 610 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று முதல் இந்தியா முழுவதும் 24 மையங்களிலும், தமிழகத்தில் மட்டும் இரண்டு மையங்களிலும் நடைபெறுகின்றது. அந்த வகையில் சென்னையில் சூலை ஜெயகோபால் அருள் ஐயப்பன் மேல்நிலைப் பள்ளியிலும், எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன. முதல் நாளன்று இன்று கட்டுரை வடிவிலான தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் காலை மற்றும் பிற்பகலில் பொது அறிவு ஒன்று முதல் நான்கு தாள்கள் வரையிலான தேர்வுகள் நடைபெறுகின்றன. 28ஆம் தேதி இந்தி மொழிகளில் ஒரு தாள் மற்றும் ஆங்கில தேர்வுகளில் ஒருதாளும், 29ஆம் தேதி விருப்பப்பாடம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளும் நடைபெற இருக்கின்றன.