லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஏவி மூன்றாவது முறையாக என் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் கால்புணர்ச்சியை போல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. இதற்கு முன்பு எத்தனையோ பேர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். காவல்துறையை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றார்.
மூன்றாவது முறையாக என் வீட்டில் ரெய்டு நடத்தி எந்த ஆதாரமும், ஆவணமும் எதுவுமே எடுக்கல. என்னுடைய வீட்டில் வெறும் 7500 பணம். இது தவிர எங்க அம்மாவுடைய ரூம்ல வெள்ளி கம்மலு இந்த மாதிரி தான் இருந்ததே தவிர. வெறும் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. கடந்த இரண்டு முறையும் ஏதும் கைப்பற்றல, இந்த முறையும் எதுமே கைபற்றல.
ஊடக நண்பர்கள் தெளிவா போடுங்க. திமுகவை பொருத்தவரை ஊடகத்துக்கு மட்டுமல்ல, நீதி அரசர்களுக், நீதிமன்றத்துக்கு நெருக்கடி. என்னுடைய வழக்கு எப்போதெல்லாம் வருகின்றதோ, அதற்கு முதல் நாள் திமுக டிவி ஆரம்பிப்பார்கள். நீதி அரசர்களுக்கு ஒரு அழுத்தம் தர்ற மாதிரி, இவங்க சொல்றதுதான் நீதிமன்றதுல நீதி கொடுக்குற மாதிரி ஒரு அழுத்தத்தை பரப்பி விடுவாங்க. டிவியும், ஊடகம் என்னைப்பற்றி செய்தி போட்டு அப்படியே கொண்டு போங்க.
இது மோசமான செயல். ஆனால் நீதியரசர்கள் தெளிவாக இருக்காங்க. என்னுடைய வழக்குல தெளிவா இது, முழுமையான பழிவாங்குதல்னு சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் சொல்லி இருக்கின்றார்கள். திமுக என் மீது போட்ட ரெண்டு வழக்கும் பொய் வழக்கு என்கிற மாதிரி சூழ்நிலை போயிட்டு இருக்கும்போது, உடனே இன்னொரு வழக்கை போடுறாங்க. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதுக்காக வழக்கு போடுகிறார் என்று பல முறை உங்கள் முன்னாடி பேசி இருக்கிறேன் என தெரிவித்தார்.