விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியதால் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஜனனி கலந்து கொண்டுள்ளார். இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்ட நிலையில் தற்போது ஜனனிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து ஜனனி பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய திருமணம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு தற்போது 21 வயது ஆகிறது. எனக்கு 26 வயது வந்த பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அடுத்த வருடமே குழந்தையும் பெற்றுக் கொள்வேன். எனக்கு 30 வயது இருக்கும் போது என்னுடைய குழந்தைகளின் நண்பர்கள் என்னை பார்த்து வியப்படைய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
😍😍😍
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 14, 2022