Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் படிக்க காதலன் கட்டாயம்….. வைரலாகும் சுற்றறிக்கை….. உண்மை என்ன…..?

பிரபலமான 2 கல்லூரி பெயரில் Spread Love  என்ற சுற்றறிக்கை வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஒரு கல்லூரிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த பிரபல கல்லூரியின் பெயரில் ஒரு சுற்றறிக்கை ஒன்று வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் ஆண் நண்பர்கள் வைத்திருக்கும் மாணவிகள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுவர் என்று உள்ளது.

பதிவாளர் சேதுராமன் என்பவருடைய பெயரில் வெளிவந்திருக்கும் அந்த சுற்றறிக்கையில், “ஆண் நண்பர் வைத்திருக்கும் மாணவிகள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு இல்லாதவர்கள் கல்லூரிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தங்களுடைய ஆண் நண்பருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கல்லூரி வளாகத்துக்குள் நுழையுமுன் காண்பிக்கவேண்டும். காதலை பரப்புங்கள் (Spread Love)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல ஆக்ராவில் உள்ள பிரபல கிறிஸ்தவ கல்லூரியிலும் இந்த சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. இதையடுத்து இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்ட போது அந்த தகவல் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் இது போன்ற அதிகாரப்பூர்வ செய்தியை எந்த நிறுவனமும் வெளியிடவில்லை. மேலும் இரண்டு சுற்றறிக்கையிலும் Spread Love என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் போலியானது என்று உண்மைத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது.

 

Categories

Tech |