முதல்வன் பட பாணியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒரு நாள் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக பதவியேற்ற ஹீரோவான அர்ஜுன், ஆளும் கட்சியினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, முதலமைச்சரையே கைது செய்வார். இந்நிலையில் அரசியல் தொடர்பான படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோன்று உத்தரகாண்டில் ஒருநாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி (19 வயது) பணியாற்றுகிறார்.
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த மனைவியின் தந்தை ஒரு வியாபாரி மற்றும் தாய் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.