Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்னும் ஒருவர் தான்… கொரோனாவை விரட்டியடிக்கும் தூத்துக்குடி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்..

முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 71 வயதான மூதாட்டி  உயிரிழந்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மீதமுள்ள 26 பேரில் இதுவரை 25 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார். அதேபோல கடந்த சில நாள்களாக புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்..

Categories

Tech |