அமெரிக்காவில் ஹோட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் இருந்த கணவர் ஒரு புகைப்படத்தால் மனைவியிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.
அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கணவருக்கு தன் மனைவி போன் செய்துள்ளார். அதன் பிறகுதான் ஹோட்டலில்தான் இருக்கிறேன் என்பதை உறுதி படுத்துவதற்காக அவர் தன் மனைவிக்கு ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படத்தால் கணவர் வசமாக மாட்டிக்கொண்டார்.
ஏனென்றால் அந்த புகைப்படத்தை அவர் குளியலறைக்கு முன்னால் இருந்து எடுத்துள்ளார். அப்போது அங்கு கண்ணாடி முன் பெண்கள் தங்களது முடியை நேராக்குவது பயன்படுத்தும் ஹேர் ஸ்டைனர் ஒன்றும், மேக்கப் கிட் ஒன்றும் இருந்துள்ளது. தன் கணவருக்கு இந்தப் பொருட்கள் தேவையும் இல்லை என்று அவர் சந்தேகம் அடைந்தார்.
அதன் மூலம் தன் கணவருடன் வேறு ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் இருக்கிறார் என்பதை உணர்ந்தார். அதன்பிறகு இவர் இந்த சம்பவத்தை வலைதளங்களில் பதிவிட்டார். அதன்பின் கணவருக்கு ஆன கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஆனால் மனைவி வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.