Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே புகைப்படம்…. ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…. குவியும் லைக்ஸ்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குறைந்து வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது.இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க காவியா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவரின் நடிப்பு தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காவியா அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. சொல்லப்போனால் இந்த ஒரு புகைப்படத்தில் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்து விட்டார் என்று கூறலாம்.

Categories

Tech |