உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் 50க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பல பாம்புகள் வெளியில் வந்து கொண்டே இருந்ததால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது நேற்று தனது வீட்டில் இருந்து சில குட்டி பாம்புகளை எடுத்துச் சென்று வயலில் விட்டதாக கூறினார். இதையடுத்து அவர் வீட்டிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பாம்புகள் வரத் தொடங்கியது.
இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து பாம்பாட்டி ஒருவரை அழைத்து பாம்புகளை பிடித்தனர். மொத்தம் 50 க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வெளியில் விட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார். வீட்டில் பாம்பை பார்ப்பது தான் வழக்கம். ஆனால் ஒரே நேரத்தில் இத்தனை பாம்புகளை நாம் பார்த்தது இல்லை என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் வெளியில் வர வேண்டாம் என மக்கள் எச்சரித்துள்ளனர்.