Categories
மாநில செய்திகள்

இன்று முதல் காலை மட்டுமே கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தகவல் வெளியாகும் – மத்திய சுகாதாரத்துறை!

இன்று முதல் நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு தகவல் தெரிவிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,694 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 617 பேரும், குஜராத்தில் 368 பேரும், மத்திய பிரதேசத்தில் 176 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் மேற்குவங்கத்தில் 140 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 14,183 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 15,525 பேரும், குஜராத்தில் 6,245 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,104 பேரும், தமிழகத்தில் 4,058 பேரும், ராஜஸ்தானில் 3,158 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,049 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,880 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து காலை மாலை என இரண்டு நேரம் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு தகவல் தெரிவிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காலை, மாலை என இருமுறை அளித்த மருத்துவ அறிக்கை இனி வரும் நாட்களில் காலை மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |