எஸ்.பி.பி குறித்த உருக்கமான கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் திரையுலகினர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து ” ஒன்றா..? இரண்டா..? என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில், பாடும் நிலா பாலு. விரைவில் அவர் மீளவும், காற்றை அவரது குரல் ஆளவும் காத்திருக்கிறேன். பால் மழைக்கு காத்திருக்கும் பூமியைப் போல… பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி போல…” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.