Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பு” அடிக்கல் நாட்டு விழா…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சுமார் 3 கோடியே 6 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரான திரு.விசாகன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் வேடச்சந்தூர் எம்.எல்.ஏ-வான காந்திராஜன் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் விழாவின் வரவேற்புரையை திட்ட இயக்குனர் தினேஷ்குமார் தொடங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய எம்.எல்.ஏ தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும், குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். அதன் பின் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி, வடமதுரை தி.மு.க செயலாளர் சுப்பையன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விழாவின் இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர் நன்றியுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |