ரயில்வே துறை காவல் துறை அதிகாரி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை உயிருடன் மீட்டுள்ளார்.
இந்தியாவிலிருக்கும் மும்பையில் போரிவாலி என்னும் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 29-ஆம் தேதி இந்த ரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற ரயிலில் பயணி ஒருவர் ஏறுவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அந்த பயணியால் ஓடும் ரயிலில் ஏற முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர், பயணி ரயிலினுள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக அவரை நடைபாதைக்கு இழுத்து மீட்டுள்ளார். இச்சம்பவம் அனைத்தும் போரிவாலி ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.