செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், தமிழிசை அம்மா பாஜக தலைவராக இருக்கிற காலத்தில் இருந்து தமிழகத்தில் தாமரை மலருது. தமிழகத்தில் வந்து பாஜக தலைவர் திமுக தமிழுக்கு ஒன்னும் செய்யலன்னு சொல்லுறாரு. ஆனால் நீங்க கட்டாயமா ஹிந்தி படிங்க அப்படின்னு சொல்லுறீங்களே.. ஒரு நேரம் வந்து ஒன்னு சொல்றீங்க, அப்பப்போ பாரதியார் கவிதை, திருக்குறள் ரெண்டு எடுத்து பேசுகிறீர்கள்.
இந்திய மொழியின் தொன்மையை தமிழில் மொழியிலிருந்து அறியலாம் அப்படின்னு சொல்றீங்க. ஓஹோ திருந்திட்டாங்க போல அப்படினு நினைச்சோம். ஆனா மறுபடியும் இந்தி சமஸ்கிருதத்தை தான் வலியுறுத்துறீங்க, புதிய கல்வி கொள்கையில் அதை தான் வலியுறுத்துது. திராவிட கட்சி திமுக தமிழ் தமிழ் என பேசி அதிகாரத்துக்கு வந்து, தமிழை ஒழிச்சுடுச்சே ஒழிய வேற ஏதும் செய்யல. தமிழ் வாழ்க அப்படின்னு எல்லா மாநகராட்சி கட்டிடத்திலும் எழுதி இருக்கு.
உள்ளே உள்ள கோப்புகளில் தமிழ் இருக்கான்னு பார்த்தா, இல்ல. ஆட்சி மொழி, அதிகார மொழி, பண்பாட்டு மொழி, பயன்பட்டு மொழி, வழிபட்டு மொழி, வழக்காடு மொழியாக இல்ல. நம்ம மொழி இல்லை செத்துடுச்சு. பயிற்று மொழியாக இருந்த தமிழ், பாட மொழியாக மாறி, திருப்பி விருப்ப பாடமாக வந்த உடனே யாரும் விரும்பல. அழிஞ்சிருச்சு, அழிஞ்சு போன மொழியை நாம மறுபடியும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை எங்கே இருக்குது என தெரிவித்தார்.