செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்முடைய முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார், நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார், அதுதான் நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
நாங்கள் மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருக்கிறோம், அவர்களிடம் போய் கேளுங்கள், போன ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ? நீங்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள் ? நாங்கள் சொன்னால் அது அரசியல். மக்கள் சொன்னால் தானே தெரியும், மக்களிடம் கேட்டால்தான் உண்மையான நிலவரம் தெரியும். நம்முடைய முதலமைச்சருக்கும் ஓஹோ.. நம் ஆட்சியில் இந்த மாதிரி எல்லாம் இருக்கிறதா ? என்று தெரியும்.
பெண்களுக்கு 1000ரூபாய் தருவோம் என்று சொல்லிட்டு, மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ள திட்டம் குறித்து பேசிய செல்லூர் ராஜீ,
மிகப்பெரிய ஒரு திட்டத்தை முடக்கிவிட்டு, இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இது பெண்களுக்கு, குறிப்பாக படிக்கின்ற பெண்களுக்கு இது உபயோகமா? திருமண உதவியாக இது அமையுமா ? என்பது எங்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது என்பது தான் எங்களுடைய எண்ணம்.
இந்த ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்வது கூட ஏற்கனவே நகை கடன் தள்ளுபடி மாதிரி ஆகிட கூடாது, அனைவருக்கும்.. 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு அவர்கள் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அரிசி வாங்குகின்ற கார்ட் அனைவருக்கும் கொடுப்போம் என்று தான் சொல்லியிருக்கிறார்கள் தேர்தல் வாக்குறுதியில்…. தகுதி வாய்ந்தவர்களுக்கு கொடுப்போம் என்று சொல்லவில்லை திராவிட முன்னேற்ற கழகம். எனவே திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.