Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப பாசமா வளர்த்தேன்” துக்கத்தில் ஊழியர் எடுத்த முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

3 வயது மகன் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் 3 வயது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் மகன் உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து கார்த்திக் வாழ்க்கையை வெறுத்து தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |