தொழிற்சாலை ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கவுதம் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவுதம் ராஜ்க்கும் வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் நண்டு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவுதம் ராஜை நண்டு என்பவருடைய நண்பர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த கவுதம் ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி கவுதம் ராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துளசிராமன் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.