தேர்தல் மையத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்காததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய மையங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் பணிபுரிந்த சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படாததால் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதற்கு பிறகு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.