தத்துவ பதிவுகளை வெளியிடும் சமந்தா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் “ஷாகுந்தலம், யசோதா” போன்ற படங்களில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளைப் பதிவிட்டு வரும் பழக்கம் நடிகை சமந்தாாவுக்கு உள்ளது. இதற்கிடையில் சில மாதங்களாக அவர் எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் வந்தாலும் அவர் நடித்து வரும் படங்களைப் பற்றிய பதிவுகளை மட்டுமே போட்டிருந்தார். பொதுவான பதிவுகள் எதையும் போடவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து தத்துவப் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றார். இதனை அடுத்து மூன்று நாட்களுக்கு முன்பு “விழுந்தாலும் நாட் அவுட்” என்று பதிவிட்டு அவரது வளர்ப்பு நாய் சோபாவில் விழுந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று “நீங்கள் எப்போதும் தனியாக நடக்க முடியாது” என்ற வாசகம் அணிந்த டீ ஷர்ட் அணிந்த தனது முகம் தெரியாத புகைப்படத்தைப் பகிர்ந்து “ஒரு வேளை இதை கேட்க வேண்டி இருந்தால்” என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்காக சமந்தா அமெரிக்கா சென்று வந்ததாக ஒரு தகவல் டோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சமந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் தத்துவ பதிவுகளை பதிவிடுகிறாரா? குழப்பத்தில் ரசிகர்கள் கேள்வி? எழுப்பி வருகின்றனர்.