ஜெயலலிதா மணிமண்டபத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தினை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தனர். இந்த ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று தெரியுமா? இதோ.
மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம், 43 மீட்டர் அகலத்தில் மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை அமைப்பில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவிடத்தில் கருங்கல் நடைபாதை, கிரானைட் கற்களாலான தரை பகுதி, புல்வெளி, நீர்த் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பரப்புரைகளில் ஜெயலலிதா அடிக்கடி பயன்படுத்தும் “மக்களால் நான் மக்களுக்காக நான்(BY THE PEOPLE FOR THE PEOPLE) ” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.