கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் போது பொதுவாக நாம் குனிந்து தோப்புக்கரணம் போடுவோம். இதுதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தோப்புக்கரணம் போடுவது எதற்காக என்பது யாருக்கும் தெரிவதில்லை. பள்ளியிலும் ஏதாவது தவறு செய்தால் ஆச்சிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். இதில் பல நன்மைகள் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. தோப்புகரணம் போடுவதால் மூளையின் செயல்திறனை அதிகரிப்பது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தோப்புகரணம் போடும் பொழுது நம்முடைய மூளையின் செல்கள் சக்தி பெறுவதற்கு காரணமாக இருக்கிறது. நாம் காதுகளை பிடிக்கும்போது குறிப்பாக சக்தி புள்ளிகளைத் தூண்டி மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது என்று யேல் பல்கலைகழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் தெரிவித்துள்ளார். இதனால் தோப்புக்கரணம் போடும்போது மாணவர்களுடைய கற்றல் திறனும் அதிகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.